முக்கியச் செய்திகள் தமிழகம்

சட்டமன்ற உறுப்பினர்களாக 9 பேர் பொறுப்பேற்பு!


சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேருக்கு சபாநாயகர் அப்பாவு இன்று பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.


கடந்த 11ஆம் தேதி நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களில் 224 பேர் பதவியேற்றனர். கொரோனா பாதிப்பு, உடல்நலக்குறைவு காரணமாக திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர், மதிவேந்தன், துணை சபாநாயகர் பிச்சாண்டி, ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட 6 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்கவில்லை.அதேபோல, அதிமுக சார்பில் வைத்திலிங்கம், விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, கடம்பூர் ராஜு ஆகியோரும் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்கவில்லை.


இந்த நிலையில் பதவியேற்காத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று நடைபெற்றது. சபாநாயகர் அறையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஓட்டப்பிடாரம் சண்முகையாவைத் தவிர்த்து மற்ற 9 பேருக்கும் சபாநாயகர் அப்பாவு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.


பொறுப்பேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்ட இந்த நல்ல நாளில் மக்களுக்கு நன்றி, தொகுதியினுடைய பிரச்சனைகளை சட்டமன்றத்தில் ஓங்கிக் குரல்கொடுப்பேன் என்று தெரிவித்தார்.


முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அளித்த கோவில்பட்டி மக்களுக்கு நன்றி, தேர்தல் நேரத்தில் வாக்களித்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவேன், சிறப்பான எதிர்க்கட்சியாக தமிழகத்தில் பணியாற்றுவோம் என்று தெரிவித்தார்.

Advertisement:

Related posts

திருப்பத்தூரில் அரசு மருத்துவக்கல்லூரி:ஸ்டாலின்

எல்.ரேணுகாதேவி

உ.பி.யில் பிளேடால் அறுவை சிகிச்சை: தாய், சிசு உயிரிழப்பு!

Gayathri Venkatesan

கூட்டணி பேச்சுவார்த்தையை, அதிமுக விரைவில் தொடங்க வேண்டும்- பிரேமலதா விஜயகாந்த்!

Jayapriya