முக்கியச் செய்திகள் தமிழகம்

தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை!

தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 35 ஆயிரத்தை கடந்து கொரோனா பாதிப்பு பதிவாகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு படுக்கை கிடைக்காத சூழ்நிலை உள்ளது.

தமிழகம் முழுவதும் புதிய மருத்துவப் படுக்கைகளை ஏற்படுத்தும் பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில்  சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் செறிவூட்டியுடன் கூடிய 104 படுக்கை வசதிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று  திறந்து வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், இரண்டாம் அலையில் கிங்ஸ் மருத்துவமனையின் சேவை சிறப்பாக உள்ளது. 300 படுக்கைகள் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடியவை இங்கு உள்ளது. தற்போது  கூடுதலாக 104 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் தனியார் மருத்துவமனைகள் குறித்து புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். 

மேலும், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பிவிட்டால் அங்கு இருந்து வேறு எங்கெங்கெல்லாம் நோயாளிகளை சேர்க்க வேண்டும் என்று நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்ற அமைச்சர், “தற்போது 18 முதல் 44 வயதுடையவர்களுக்கு  வந்துள்ள தடுப்பூசிகள் முன்னுரிமை அடிப்படையில் ஒரே வாரத்திற்குள் போட்டு முடிக்கப்படும்” என்ற தகவலையும் தெரிவித்தார். 

Advertisement:
SHARE

Related posts

புதிய அரசுக்காக தயாராகும் தலைமைச் செயலகம்!

Ezhilarasan

கொரோனா ஊரடங்கு: கோடீஸ்வரர்கள் சொத்து உயர்வு, லட்சக்கணக்கானோர் வேலையிழப்பு!

Saravana

கோலாகலமாக தொடங்கியது டோக்கியோ ஒலிம்பிக்

Gayathri Venkatesan