12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து குறித்து ஆலோசனை: அமைச்சர் அன்பில் மகேஷ்!

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து, நாளை மறுநாள் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்கு காரணமாக, 10 ஆம் வகுப்பு…

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து, நாளை மறுநாள் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்கு காரணமாக, 10 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. எனினும் 12 ஆம் வகுப்பு தேர்வு தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மே 3ம் தேதி, தேர்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையை காரணம் காட்டி தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், +2 தேர்வை ரத்து செய்வது குறித்து நாளை மறுநாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்த உள்ளார். ஆன்லைன் வகுப்புகளுக்கான கட்டணங்களை முறைப்படுத்துவது, ஊரடங்கு காலத்தில் மாணவர்களின் கல்வி குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.