6 லட்சம் தடுப்பூசி கொள்முதல் செய்ய உத்தரவு : தமிழிசை

புதுச்சேரியில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக 6 லட்சம் தடுப்பூசி கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மருந்துகள் வந்ததும் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் எனவும் துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். புதுச்சேரி சுகாதாரத்துறைக்கு, தனியார் அமைப்பு…

புதுச்சேரியில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக 6 லட்சம் தடுப்பூசி கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மருந்துகள் வந்ததும் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் எனவும் துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சுகாதாரத்துறைக்கு, தனியார் அமைப்பு ஒன்று 10 ஆயிரம் கிருமிநாசினி குப்பிகளை இன்று வழங்கியது. அதை, துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பெற்று சுகாதாரத்துறையிடம் ஒப்படைத்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரியில் கட்டுப்பாடுகள் அதிகமாக விதிப்பது மக்களைத்தான் பாதிக்கும் என்றும் விதிமுறைகளை அவர்கள் சரியாக கடைபிடித்தால் அதிகக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய அவசியம் இருக்காது எனத் தெரிவித்தார்.

கொரோனா ஒரு தொற்று நோய் என்றும் இதிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கடமை என்றும் தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலம், இந்த நோயை கட்டுப்படுத்தலாம் என்றும் தெரிவித்தார்.

புதுச்சேரியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக, 6 லட்சம் தடுப்பூசி கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அந்த மருந்துகள் வந்ததும் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்றும் அதுவரை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் துணைநிலை ஆளுநர் தமிழிசை கேட்டுக்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.