முக்கியச் செய்திகள் உலகம் லைப் ஸ்டைல் செய்திகள்

அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட “மீம்”!

சமூக ஊடகங்களில் வலம் வந்த பிரபலமான மீம் ஒன்று இணையத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஜோஸ் ரோத், கடந்த 2005 ஆம் ஆண்டில் தனது தந்தையால் எடுக்கப்பட்ட பிரபலமான மேக்ரோ புகைப்படத்திற்காக ” டிசாஸ்டர் கேர்ள் ” என்று அழைக்கப்படுகிறார். அவர் அந்தப் புகைப்படத்தில் ஒரு வீடு பின்னணியில் எரிந்து கொண்டிருக்கும்போது கேமராவைப் பார்த்து சூழ்ச்சமமாக சிரித்துக்கொண்டிருப்பார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு நாளடைவில் நெட்டிசன்கள் மத்தியில் ஒரு பிரபலமான மீமாக மாறிவிட்டது. தற்பொழுது அப்புகைப்படத்தின் அசலை கிட்டத்தட்ட 3,70,52,697 கோடி ரூபாய்க்கு NFT- யிடம் விற்பனை செய்துள்ளார் ரோத்.

இதுகுறித்து ரோத் செய்தியாளர்களிடம் தனது மாணவர் கடன்களை அடைப்பதற்காகவும் தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நன்கொடை அளிப்பதற்காகவும் அந்த பணத்தைப் பயன்படுத்தப் போவதாகக் கூறினார்.

தனித்துவமான டிஜிட்டல் பொருட்களின் உரிமையை வாங்கவும் விற்கவும் NFT-கள் மக்களை அனுமதிக்கின்றன. NFT என்பது Non-Fungible Token என்பதாகும். மேலும் இது தொழில்நுட்ப ரீதியான வரைபடங்கள், அனிமேஷன் செய்யப்பட்ட GIF-கள், பாடல்கள் அல்லது வீடியோ கேம்கள் உட்பட டிஜிட்டல் சம்பந்தமான அனைத்தையும் NFT மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

துபாயைத் தளமாகக் கொண்ட “3F மியூசிக்” எனப்படும் ஒரு இசை நிறுவனம் ரோத்தின் NFT-யை வாங்கியுள்ளனர். மேலும் அந்த நிறுவனம் இதுபோன்று இன்னும் பல பிரபலமான மீம்களின் புகைப்பட அசல்களை வாங்கியுள்ளனர்.

இதனையடுத்து கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், 3F மியூசிக் அதன் கொள்முதலை விளக்கினர். அதில் அவர்கள், “எங்கள் நிர்வாக குழு எப்பொழுதும் அதிக அனுபவம் வாய்ந்த கலை ஆலோசகர்களுடன் ஒத்துழைத்து இயங்குகிறது. இதனால் அவர்கள் தொழில்நுட்ப இயக்கங்களுடன் வளர வேண்டும் என்பதற்காகவும் சகக் கலைஞர்களையும் அவர்களின் திறமைகளையும் ஆதரிப்பதற்காகவும் செயல்பட்டு வருகிறார்கள்” என்று கூறினர்.

Advertisement:

Related posts

திருநங்கைகளுக்கு வேலை உருவாக்கித் தருவேன்: அதிமுக வேட்பாளர் கஜேந்திரன்

Halley karthi

குழந்தைகளுக்கான பிரத்தியேக கார்கள்: எதற்காகத் தெரியுமா?

Jeba Arul Robinson

இளைஞர்களுக்கு அவசரமாக கொரோனா தடுப்பூசி தேவை: பிரதமரிடம் பஞ்சாப் முதல்வர் கோரிக்கை!

Halley karthi