வயது என்பது எண் மட்டுமே : நடிகை வஹீதா ரெஹ்மான்!

பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகையான வஹீதா ரெஹ்மான் தனது மகளுடன் செய்த சாகசத்தின் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெறும் வரவேற்பைப் பெற்று வருகிறது. பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகையான வாகீதா ரெஹ்மானின் மகள் கஷ்வி…

பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகையான வஹீதா ரெஹ்மான் தனது மகளுடன் செய்த சாகசத்தின் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெறும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகையான வாகீதா ரெஹ்மானின் மகள் கஷ்வி ரேகி அடிக்கடி தனது தாயுடன் சேர்ந்து சுற்றுலா செல்லும் புகைப்படங்கள் மற்றும் அவர்களின் அபிமான தாய்-மகள் நேரங்களையும் அவர்களின் சில அரிய புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். சமீபத்தில் அவர் தனது 83 வயதான தாய் வஹீதா ரெஹ்மானுடன் ஸ்னார்க்லிங் செய்யும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். பின்பு அப்புகைப்படத்தின் கீழ், “அம்மாவுடன் ஸ்நோர்கெல்லிங்” #Waterbabies என்ற ஹேஷ்டேக்குடன் தலைப்பிட்டிருந்தார்.

மேலும் படத்தில், புகழ்பெற்ற நடிகை தனது மகளுடன் தண்ணீரில் மிதந்தவாறு உற்சாகமாக போஸ் கொடுக்கிறார். பின்பு அவர்கள் இருவரும் சாகச விளையாட்டுக்குத் தேவையான பாதுகாப்பு கியர்களை அணிந்திருப்பதைக் காணலாம். 83 வயதான அந்த நடிகை “வயது என்பது ஒரு எண் மட்டுமே” என்று உணர்த்தி பலருக்கும் ஒரு முன்னோடியாக விளங்கியுள்ளார்.

இதனையடுத்து வஹீதாவின் ஸ்னார்க்லிங் படம் குறித்து அவரின் ஏராளமான ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். அதில் ரசிகர் ஒருவர் தனது கருத்தில், “வஹீதா தனது பக்கெட் லிஸ்டில் இருக்கும் விஷயங்களைச் சிறப்பாகச் செய்து முடிக்கிறார். வாகீதா ஜி எப்பொழுதும் நம்மை உற்சாகப்படுத்துகிறார்!” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் மற்றொரு பயனர் தனது கருத்தில், “அவர் இறுதியாகத் தனது பக்கெட் லிஸ்டில் இருந்து இதைத் தேர்ந்தெடுத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்! வயது என்பது ஒரு எண் மட்டுமே! நீங்கள் தான் சிறந்தவர் வாகீதாஜி” என்று பதிவிட்டிருந்தார்.

வஹீதா ரெஹ்மான் சிறந்த நடிகை மட்டுமல்லாமல் புகைப்படம் எடுத்தல், பயணம் செய்தல் மற்றும் சாகச விளையாட்டுகளில் ஈடுபடுதல் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.