முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

கொரோனா இல்லாத மாநிலமாக தமிழகம் விரைவில் மாறும் : அமைச்சர் பெரிய கருப்பன்

தமிழகத்திற்கு அதிக தடுப்பூசிகளை தர, மத்திய அரசிடம் முதல்வர் வலியுறுத்தி வருவதாகவும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய, தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் பெரிய கருப்பன், இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன், அனைவருக்கும் தேவையான தடுப்பூசிகள் கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கொரோனா பாதிப்பு நாள்தோறும் 37 ஆயிரம் வரை இருந்த நிலையில், அரசு மேற்கொண்ட பணிகளால், தற்போது 17 ஆயிரமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போது நகரங்களை தாண்டி கிராம பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு இருக்கிறது, விரைவில் கொரோனா இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும் என்ற அமைச்சர், தடுப்புசிகளை அதிகம் தர மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார் என்றும் வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

இந்தியாவில் விரைவில் ஒன்பிளஸ் 9RT

Ezhilarasan

இந்தியாவுக்கே முன்னோடி: ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டம் தொடக்கம்

Gayathri Venkatesan

ஆப்கானில் இருந்து வெளியேறும் மக்களை உலக நாடுகள் ஏற்க வேண்டும்: ஐ.நா

Gayathri Venkatesan