முக்கியச் செய்திகள் செய்திகள் விளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட்: இங்கிலாந்து தடுமாற்றம்!

நியூசிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரை அடுத்து இந்தியாவுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட இருக்கிறது.

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, டிராவில் முடிந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி பிர்மிங்காமில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில், நியூசிலாந்து அணியின் கேப்டன், கேன் வில்லியம்சன் காயம் காரணமாக இடம்பெறவில்லை. கடந்த போட்டியில் பங்கேற்காத வேகபந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் இதில் இணைந்துள்ளார்.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இங்கி லாந்து அணியின், ரோரி பர்ன்ஸும் டோம் சிப்லியும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். சிப்லி 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹென்றியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜாக் கிராவ்லி, ரன் கணக்கை தொடங்காமல் வாக்னர் பந்துவீச்சிலும் கேப்டன் ஜோ ரூட், 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஹென்றி பந்துவீச்சிலும் அடுத்தடுத்து வீழ்ந்தனர்.

அடுத்து வந்த போப்பும் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் தொடக்க ஆட்டக்காரர் பர்ன்ஸ் நிலைத்து நின்றார். இருந்தும் 81 ரன்கள் எடுத்திருந்த நிலையில், டிரெண்ட் போல்ட் வேகத்தில் லாதமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த ஜேம்ஸும் போல்ட் பந்துவீச்சில் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, அந்த அணி 66 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. டான் லாரன்ஸ் 34 ரன்களுடன் ஸ்டோன் 5 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

Advertisement:

Related posts

அண்டார்டிகாவையும் விட்டு வைக்காத கொரோனா!

Jayapriya

சீனாவில் 3 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த ஒப்புதல்!

Gayathri Venkatesan

மக்களின் தீர்ப்பை ஏற்கிறேன் : எல்.முருகன்

Ezhilarasan