தமிழ்நாடு: இன்று உயர்கிறது மதுபானங்களின் விலை

தமிழ்நாட்டில், இன்று முதல் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், குவாட்டர் ஒன்றுக்கு (சாதாரண ரகங்களுக்கு) 10 ரூபாய் வீதமும், உயர் ரகங்களுக்கு 20 ரூபாய் வீதமும்…

தமிழ்நாட்டில், இன்று முதல் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், குவாட்டர் ஒன்றுக்கு (சாதாரண ரகங்களுக்கு) 10 ரூபாய் வீதமும், உயர் ரகங்களுக்கு 20 ரூபாய் வீதமும் மதுபான விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆஃப் பாட்டில் ஒன்றுக்கு 20 ரூபாய் வீதம் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்தி: இதுவரை காணாத வெற்றியை திமுக பெற்றிருக்கிறது – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளின்படி மதுபான விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேளும், மதுபானங்களின் விலை உயர்வால் தமிழ்நாடு அரசுக்கு நாள் ஒன்றுக்கு 2 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும், ஆண்டுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் வரை கூடுதல் வருவாய் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது மிகுந்த வருத்தம் அளிப்பதாக மதுபிரியர்கள் பலரும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.