75வது சுதந்திர தினத்தையொட்டி எழும்பூர் ரயில் நிலையத்தில் “விடுதலை போரில் தமிழகம்” என்ற தலைப்பில் அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நாட்டின் 75 வது சுதந்திர தினம் இன்று இந்தியா முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று கொடியேற்றி வைத்தார். பின்னர் தகைசால் தமிழர் விருது, அப்துல்கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, மாநில இளைஞர் விருது போன்ற விருதுகள் வழங்கப்பட்டது.
பின்னர் 75வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளகாத்தில் அமைக்கப்பட்டுள்ள “விடுதலை போரில் தமிழகம்” என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டார்.
இதில் சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் அணிவகுப்பட்டிருந்தது. நாட்டின் சுதந்திரத்திற்கு அவர்கள் செய்த தியாகத்தை போற்றும் வகையில் அது வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, சாமிநாதன், எம்பி தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.







