முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

கூகுள் பே மூலமாக பணத்தை வாங்கிக்கொண்டு கஞ்சா விற்பனை; இருவர் கைது

கூகுள் பே மூலமாக பணத்தை வாங்கிக்கொண்டு கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இரண்டு வடமாநில இளைஞர்கள் போலீசார் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்பனை செய்து வருவதாக ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை, பிடித்து விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த கைப்பையில் சுமார் 2கிலோ 150 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. உடனே அவர்களைப் பிடித்து ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்ததில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 33 வயரான மனாஸ் ரூட் , பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 26 வயதான பப்புகுமார் என்பது தெரிய வந்தது.

இவர்கள் இருவரும் தண்டலம் பகுதியில் வாடகை வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர். மனாஸ் ரூட் மற்றும் பப்புகுமார் இருவரும், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தண்டலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி முன்பு கஞ்சா விற்பனை செய்து வருவதாகவும், அதே கல்லூரியை சேர்ந்த மாணவ மாணவிகள் 250க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு வாடிக்கையாளர்களாக இருப்பதும் தெரியவந்தது. 50 பெண் வாடிக்கையாளர்களுக்கு கூகுள்பே மூலம் பணத்தை பெற்றுக்கொண்டு விற்பனை செய்து வந்துள்ளனர்.

இவர்கள் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். ஒரிசா, பீகார் போன்ற வடமாநிலங்களில் இருந்து கண்டெய்னர் மூலம் ஓட்டுநர்கள் ஒரு கிலோ கஞ்சா 2000 ரூபாய்க்கு வாங்கி வந்து ஸ்ரீபெரும்புதூரில் நான்காயிரம் ரூபாய்க்கு விற்பதாகவும்.

இங்குள்ள விற்பனையாளர்கள் அதை வாங்கி ஏழு கிராம் பொட்டலம் போட்டு 500 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. 4000 ரூபாய்க்கு வாங்குகிற கஞ்சாவை பொட்டலம் போட்டு 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்று அதிகஅளவில் கல்லா கட்டுவதால் வட மாநில இளைஞர்கள் அதிக அளவில் கஞ்சா விற்பனைசெய்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த சில தினங்களாக ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கஞ்சா விற்பனையாளர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில் 80 சதவீதம் பேர் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த சம்பவன் அதிர்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கோவை கார் வெடிப்பு சம்பவம்; கைது செய்யப்பட்ட 5 பேரை விசாரணை செய்த என்ஐஏ அதிகாரிகள்

G SaravanaKumar

துப்பாக்கி சுடுதல் போட்டி: ரஷ்யா, பெலாரஸ் அணிகளுக்கு தடை

Halley Karthik

10 ஆண்டுகளுக்கு பின் பேருந்து இயக்கம்; பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்

G SaravanaKumar