10% இடஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பாக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை பசுமை வழி சாலையில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களை சந்தித்தார். அப்போது, அவரது ஆதரவாளர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றதுடன், அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ பன்னீர்செல்வம், தன் சார்பில் நியமிக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்களை சந்தித்தாக கூறினார்.
ஆளுநர் இந்திய அரசியல் சட்டப்படி அவருக்குரிய கடமைகளை செய்து வருகிறார். மாநில அரசு செயல்பாடுகளுக்கு ஆளுநர் இடையூறாக இருந்தார் என கூறுவதற்கு ஆதாரம் இல்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் நான் தான் என்ற அவர், புதிய பொறுப்பாளர்களை நியமிக்கும் கடமை தனக்கு தான் உள்ளது என தெரிவித்தார்.
தான் அளித்த ஆதரவால் தான் 5 வாக்கில் பழனிசாமி அரசு காப்பாற்றப்பட்டது. நம்பிக்கை துரோகி யார் என்பது தமிழக மக்களுக்கு தெரியும். தான் ஜானகி அணியில் இருந்தேன் என சொல்கிறார்கள். ஆனால், தனது கடும் உழைப்பில் சம்பாதித்த பணத்தில் எம் ஜி ஆர், அதிமுக கட்சி அலுவலகத்தை ஜானகி பெயரில் தான் வாங்கினார் என்றார். பொருளாதார இட ஒதுக்கீடு வழக்கு தொடர்பாக தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.








