திமுக முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு மீது நெடுஞ்சாலைத் துறையில் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. அதன்படி கடந்த 25ஆம் தேதி எ.வ. வேலுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர்சோதனை நடத்தினர். இதற்கிடையில் அவர் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு சென்றதால் அவரை தேடப்படும் நபராக அறிவித்து போலீஸார் லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர்.
தனக்கு எதிரான வழக்கையும், லுக்-அவுட் நோட்டீஸைம் ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எ.வ.வேலு மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து லுக்-அவுட் நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனிடையே முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு இன்று சென்னை ஆலந்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜகரானார்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் மேலுமுறையீட்டு மனு இன்று உச்சந்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், முன்னாள் அமைச்சர் ஏ.வெ.வேலு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என்றும், அவருடைய பாஸ்போர்ட்டையும் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
இதற்கு நீதிபதிகள், “எதிர்மனுதாரர் விசாரணைக்கு முழு ஓத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளார். அவர் ஒத்துழைப்பு வழங்குவார். சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. பாஸ்போர்ட் ஒப்படைப்பு விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடுங்கள் என்று தெரிவித்தனர். மேலும் இந்த அவழக்கு தொடர்பாக எந்த உத்தரவையும் நாங்கள் பிறப்பிக்கவில்லை என்று கூறி தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.




