பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
“பள்ளி மணிகள் பல ஒலிக்கட்டும்,
பாமரனுக்கும் கல்வி எளிதாகட்டும்,
என தமிழகத்தின் கல்விக்கண்
திறந்த கர்மவீரர் ..,
நாடு நலம் பெற,
விவசாயம் செழிக்க,
அணைகள் பலதந்த மாமனிதர்..,
தமிழகத்தின்
வளர்ச்சிக்கு வித்திட்ட,
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த தினத்தில் அவர்தம் பெரும்புகழை போற்றி வணங்குகிறேன்”.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




