தமிழ்நாடு அரசின் கடன் தொகை ரூ.20 லட்சம் கோடியாக உயரும் – தங்கம் தென்னரசு!

தமிழ் வளர்ச்சித்துறைக்கு வெறும் 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தங்கம் தென்னரசு விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “2026 மற்றும் 27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருக்கிறார். இந்த நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டு மக்களை எதிர்பார்ப்பு இருந்த இந்த பட்ஜெட் பெறும் மாற்றம் அளிக்கிறது.

இந்த நிதிநிலை அறிக்கையின் ஒட்டுமொத்த சாரம்சம் எந்தெந்த வகையில் எல்லாம் நிதிநிலை அறிக்கை என்பது மக்களுடைய எதிர்பார்ப்புகளை போய்த்து போக செய்திருக்கிறது. நிதி அமைச்சர் அவர்கள் வெள்ளை அறிக்கை வெளியிட்டு சில கருத்துக்களை சொல்லி இருந்தார். நான் செய்தியாளர்களை சந்தித்து பல கருத்துக்களை நானும் வெளியிட்டு இருந்தேன். நாங்கள் என்ன கொடுத்தோமோ அதே தான் தமிழக வெற்றி கழக கட்சியும் ஆகும் அவர்களும் கொடுத்திருக்கிறார்கள். கடன் வாங்குவது மத்திய அரசு கொடுத்த அந்த எல்லைக்கு உட்பட்ட தான் கடன் வாங்கி இருக்கிறோம். நிதி துறை செயலாளர் அவர்கள் கடன் எல்லாம் வாங்குவது குறைக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

கடன் வாங்குவதெல்லாம் அதிகரித்து தான் செல்லும் என்று அவர் தெரிவித்து இருக்கிறார். 22000 கோடி ரூபாய் இன்னும் குடுதலாக கடன் வாங்குவோம் என்றும் சொல்கிறார்கள். வருவாய் பற்றாக்குறை 7000 கோடி ரூபாய் உயர்ந்திருக்கிறது. மாநில அரசுடைய சொந்த வருவாயில் 2 லட்சத்து 29 ஆயிரம் கோடி நாங்கள் ஒதுக்கினோம். ஆனால் தற்போது இரண்டு லட்சத்து 26 ஆயிரம் கோடி ஒதுக்கி இருக்கிறார்கள். இதில் 3000 கோடி ரூபாய் குறைந்து இருக்கிறது. இந்த அரசு வெள்ள அறிக்கையாக வெளியிட்டு, திமுக அரசுக்கு எதிராக தெரிவித்தது, தற்போது இந்த அரசு முற்றிலுமாக தோல்வியடைந்துள்ளது.

திமுக ஆட்சியில் இருந்த திட்டங்கள் பெயர்கள் இந்த ஆட்சியில் மாற்றி அமைத்திருக்கிறார்கள். இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிக்க கூடியதாக இருக்கிறது. தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறைக்கு அடுத்த ஆட்சி வரும்போது நிதியை குறைத்து இருக்கிறார்கள். அதே போன்று தான் இந்த ஆட்சிலும் குறைத்து இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.