முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் டெல்லியில் போராட்டம்

முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு எதிரான நடவடிக்கையை கேரள அரசு தொடர்ந்தால் அம்மாநிலத்திக்கு செல்லும் பொருட்கள் அனைத்தும் நிறுத்தப்படும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் எச்சரித்துள்ளது.

 

முல்லைப் பெரியாறில், புதிய அணை கட்டப்படும் என்று கேரள சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் இடம்பெற்ற ஷரத்தை நீக்க வலியுறுத்தி, கேரள ஆளுநரையும், கேரள அரசையும் கண்டித்து தமிழக விவசயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் டெல்லியில் உள்ள கேரளா இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

இந்த முற்றுகை போராட்டத்துக்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்திருந்த நிலையில், தடையை மீறி விவசாய அமைப்பினர் முற்றுகை போராட்டம் நடத்தினர், முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிரான நவடிக்கையை கேரள அரசு தொடர்ந்தால் அம்மாநிலத்திக்கு செல்லும் பொருட்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்படும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.


தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில் முல்லை பெரியாறில் பேபி அணையை வலுப்படுத்தி 152 அடியாக நீர் மட்டத்தை உயர்த்தலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது, ஆனால் கேரள சட்டமன்றத்தில் முல்லைப்பெரியாறு அணை பலவீனமாக உள்ளது, எனவே நீரை 136 அடியாக குறைக்கப்படும் ஆளுநர் தனது உரையில் கூறியுள்ளார் அப்படியெனில், கேரள ஆளுநர் உச்சநீதிமன்றத்துக்கு எதிரானவரா ? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டம், டெல்லி காவல்துறையினரின் அறிவுறுத்தியதை தொடர்ந்து முடித்துக்கொள்ளப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆதரவற்ற சடலத்தை அடக்கம் செய்த மநீம வேட்பாளர்!

Jeba Arul Robinson

சாவித்திரி கண்ணன் மீது வழக்கு: சிபிஎம் கண்டனம்

Web Editor

பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க பாஜக அரசு தயாரக இல்லை; கனிமொழி எம்பி விமர்சனம்

G SaravanaKumar