முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

சென்னையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடுகிறது.

செய்தியைக் கேட்க
AI குரல் வடிவம்
0:00 –:–

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடக்கிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், தமிழக அரசின் பல்வேறு முக்கியத் திட்டங்கள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது, அரசின் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவது, அரசுத் துறைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

புதிய தொழில் நிறுவனங்கள் தொடர்பான முடிவுகள், அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் துறைகளின் செயல்பாடுகள் ஆகியவை கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அரசின் அறிவிப்புகள் எந்த அளவுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.