தமிழ்நாடு பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை தற்போது பார்க்கலாம்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 2022 – 2023ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனால் அறிவிக்கப்பட்டது.
➤அதில், அதிகபட்சமாக பள்ளிக்கல்வித்துறைக்கு 36 ஆயிரத்து 895 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
➤அதற்கு அடுத்தபடியாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 20 ஆயிரத்து 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
➤நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு 18 ஆயிரத்து 218 கோடி ரூபாய் நிதியும்,
➤மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு 17 ஆயிரத்து 901 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
➤காவல்துறைக்கு 10 ஆயிரத்து 285 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
➤நீர்வளத்துறைக்கு 7 ஆயிரத்து 338 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
➤சமூக நலத்துறைக்கு 5 ஆயிரத்து 922 கோடி ரூபாயும்,
➤ஆதிதிராவிடர் நலத்துறைக்கு 4 ஆயிரத்து 281 கோடி ரூபாய் நிதியும் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
➤கூட்டுறவுத்துறைக்கு 4 ஆயிரத்து 131 கோடி ரூபாய் நிதியும்,
➤கால்நடை பராமரிப்புத் துறைக்கு ஆயிரத்து 314 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
➤சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறைக்கு பட்ஜெட்டில் 849 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
➤மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு 838 கோடி ரூபாய் நிதியும்,
➤இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு 293 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
➤அதேபோல், தமிழ் வளர்ச்சித் துறைக்கு 82 கோடியே 86 லட்சம் ரூபாய் நிதி, இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.








