குடிசை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில், 2031-ஆம் ஆண்டுக்குள் குடிசை இல்லாத மாநிலமாக்க திட்டமிடப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்க கூட்டமைப்பான கிரடாய் அமைப்பின் தமிழ்நாடு பிரிவு நடத்திய ஸ்டாட்கான்…

தமிழ்நாட்டில், 2031-ஆம் ஆண்டுக்குள் குடிசை இல்லாத மாநிலமாக்க திட்டமிடப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்க கூட்டமைப்பான கிரடாய் அமைப்பின் தமிழ்நாடு பிரிவு நடத்திய ஸ்டாட்கான் – 2021 மாநாடு சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், வேளாண் தொழிலுக்கு அடுத்தபடியாக கட்டுமான தொழில்தான் அதிக வேலைவாய்ப்பை வழங்குவதாகவும், கட்டுமான தொழிலை ஊக்குவிக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில், 2031-ஆம் ஆண்டுக்குள் குடிசை இல்லாத மாநிலமாக மாற்ற திட்டமிடப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அடுத்த பத்தாண்டுகளில் ஏழை, எளிய மக்கள் 9.53 லட்சம் பேருக்கு வீடுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், 31 ஆயிரத்து 179 கோடி ரூபாய் மதிப்பில் 6.2 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். வீடுகள் சிறியதாக இருந்தாலும், அனைவருக்கும் வீடு என்ற இலக்கை தமிழ்நாடு அடைய தனியார் கட்டுமான நிறுவனங்களும் அரசு ஒத்துழைப்பு அழைக்க வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.