முதலமைச்சருடன் ரகுராம் ராஜன் ஆலோசனை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் ரகுராம் ராஜன் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டில் பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெற வேண்டி நிபுணர்கள் ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், ஜான் ட்ரீஸ், எஸ்.நாராயண் ஆகியோரைக்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் ரகுராம் ராஜன் ஆலோசனை நடத்தினார்.

தமிழ்நாட்டில் பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெற வேண்டி நிபுணர்கள் ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், ஜான் ட்ரீஸ், எஸ்.நாராயண் ஆகியோரைக் கொண்ட பொருளாதார ஆலோசனைக்குழுவை அரசு அமைத்துள்ளது.

இந்த குழு கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே இந்த குழு, 2 முறை முதலமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளது.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுடன் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் ரகுராம் ராஜன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலர் இறையன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.