முக்கியச் செய்திகள் தமிழகம்

புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் – அப்பாவு

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் வரும் 5-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் புனித ஜார்ஜ் கோட்டையில் தொடங்கும் என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தொற்று குறைந்து வருவதால், புனித ஜார்ஜ் கோட்டையில் கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். காகிதமில்லா முறையில், தொடுதிரை வசதியுடன் கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் அப்பாவு கூறினார்.

சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் பார்வையாளர்களை அனுமதிப்பது குறித்து, அலுவல் ஆய்வுக் கூட்டம் கூடி முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார். சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகளில் நேரலை செய்வது தொடர்பாக, கவனத்தில் உள்ளதாகவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

கொரோனா நோய் தொற்று காரணமாக ஏப்ரல் 2020, முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் கலைவாணர் அரங்கில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் புதிதாக 1,090 பேருக்கு கொரோனா உறுதி

Saravana Kumar

நீட் தேர்வு – அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிக்க வாய்ப்பு

Halley Karthik

வேலூர் அரசு மருத்துவமனையில் 3 பேர் உயிரிழப்பு: ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமா ?

Halley Karthik