முக்கியச் செய்திகள் இந்தியா

சிபிஎஸ்இ தேர்வில் பெண்களுக்கு எதிரான கருத்துகள்: அரசியல் தலைவர்கள் கண்டனம்

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு வினாத்தாளில் கேட்கப்பட்ட சர்ச்சைக்குறிய கேள்விக்கு காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி உள்பட அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சமீபத்தில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பருவத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் குடும்ப ஒழுக்கம் தொடர்பாக வாக்கியம் கொடுத்து விடையளிக்கும் பகுதி இடம் பெற்றிருந்தது. இதில், “பெண்களின் சுதந்திரமானது குழந்தைகளின் மீதான பெற்றோர்களின் உரிமையை அழித்துள்ளது.” என்றும் கணவர்களுக்கு மனைவிமார்கள் கீழ்ப்படிந்து நடப்பதில் என்கிற தொணியிலும் வாக்கியம் வழங்கப்பட்டிருந்தது.

இந்த வாக்கியத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் மேலெழுந்தன. இன்று நாடாளுமன்ற மக்களவையில் பேசிய காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, “இந்த வாக்கியங்கள் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அரசு இதற்கு மன்னிப்பு கோர வேண்டும்.” என்று வலியுறுத்தினார்.

அதேபோல “தம்மால் நம்பவே முடியவில்லை; இதுபோன்ற அபத்தமான கருத்துகளைத்தான் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கிறோமா? பாஜக அரசு இந்த பிற்போக்குத்தனமான கருத்துகளை ஆதரிக்கின்றது.” என தனது டிவிட்டர் பக்கத்தில் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “ இதுவரை சிபிஎஸ்இ தாள்கள் மிகவும் கடினமாகத்தான் இருந்துள்ளது. ஆங்கிலத்தாளில் உள்ள பத்தியை படித்து விடையளிக்கும் பகுதி அருவருப்பாக உள்ளது. இளைர்களின் மன உறுதியை நசுக்க ஆர்எஸ்எஸ்- பாஜக சூழ்ச்சி செய்கிறது. குழந்தைகளே உங்களால் முடிந்ததை செய்யுங்கள். கடின உழைப்பு பலன் தரும். மதவெறி அல்ல” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

கரூர் எம்.பி ஜோதிமணி, “பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகளுக்கு எதிரான பொறுப்பற்ற வெறுப்பை உமிழும் இத்தகைய கேள்விகளை சிபிஎஸ்இ வாரியம் திரும்ப பெற வேண்டும். இது பாலின பாகுபாட்டை ஊக்குவிப்பதோடு இந்திய அரசியலமைப்பு சட்டம் முன்னிறுத்திய பாலின வாதங்களுக்கு எதிரானதாகும்.” என்று தனது கண்டனத்தை டிவிட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்.

அதேபோல, “சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் வகையிலான பிற்போக்குத்தனமான கருத்துகள் இடம் பெற்றுள்ளதற்குக் கண்டம் தெரிவித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறுவதைத் தடுக்க சிபிஎஸ்இ நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மதுரை எம்.பி சு.வெங்கடேசன், இந்த சர்ச்சைக்குரிய வினா தாளை தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிபிஎஸ்இ தலைவர் மனோஜ் அகுஜாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனையடுத்து தற்போது சர்ச்சைக்குரிய கேள்வி வினா தாளிலிருந்து நீக்கப்பட்டதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

3-வது அலை குழந்தைகளை மட்டும் பாதிக்கும் என்பது தவறான தகவல்: ராதாகிருஷ்ணன்

Vandhana

தமிழகத்தின் அடுத்த டிஜிபி சைலேந்திரபாபு?

Halley Karthik

வாக்கு எண்ணும் மையம் வருபவர்களுக்கு 2 தவணை தடுப்பூசி கட்டாயம்!

Ezhilarasan