‘தமிழன் கொடி பறக்குது… தலைவன் யுகம் பொறக்குது…’ #TVK பாடல் வெளியீடு! கவனம் பெற்ற கட்சிக்கொடி உருவான விதம் குறித்து வரிகள்!

‘தமிழன் கொடி பறக்குது… தலைவன் யுகம் பொறக்குது’ என்று தொடங்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அக்கட்சியின் கொடியை சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில்…

‘தமிழன் கொடி பறக்குது… தலைவன் யுகம் பொறக்குது’ என்று தொடங்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அக்கட்சியின் கொடியை சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் அறிமுகம் செய்தார். சிவப்பு, மஞ்சள் ஆகிய இரு நிறங்களுடன் இரண்டு போர் யானைகள், நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் திரளாக பங்கேற்றனர். விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் சோபா சந்திரசேகர் இருவரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பாடல் ஒன்றும் வெளியிடப்பட்டது.

‘தமிழன் கொடி பறக்குது…

தலைவன் யுகம் பொறக்குது

மூணெழுத்து மந்திரத்த

மீண்டும் காலம் ஒலிக்குது

சிருசும் பெருசும் ரசிக்குது

சிங்கப் பெண்கள் சிரிக்குது

மக்களோட தொப்புள்கொடியில்

மொளச்ச கொடியும் பறக்குது

மனசில் மக்கள வைக்கும்

தலைவன் வரும் நேரமிது

மக்களும் அவன மனசில் வச்சு

ஆடிப்பாடி கூப்புடுது

சிகரம் கிடைச்ச பின்னும்

எறங்கி வந்து சேவை செஞ்சு

நீங்க கொடுத்த எல்லாத்துக்கும்

நன்றி காட்டும் காலமிது

தமிழா தமிழா

நம்ம வாழப்போறோமே

ஒரு கறை இல்லாத கையப் புடிச்சு

போகப்போறோமே

தமிழன் கொடி

தலைவன் கொடி

தருமக் கொடி

தரையின் கொடி

வீரக் கொடி

விஜயக் கொடி

ஆதிக்குடிய காக்கும் கொடி…

ரெத்த செக்கப்பில் நெறமெடுத்தோம்

ரெட்ட யான பலம் குடுத்தோம்

நரம்பில் ஓடும் தமிழுணர்வ

உருவிக்கொடியின் உருக்கொடுத்தோம்

மஞ்சள் எடுத்து அலங்கரிச்சோம்

பச்ச நீல திலகம் வச்சோம்

பரிதவிக்கும் மக்கள் பக்கம்

சிங்கம் வர்றத பறையடிச்சோம்

தோளில் வந்து கையப் போடும்

தலைவன் கொடி ஏறுது

அரசர கேள்வி கேட்கும்

தளபதியின் காலமடி

அன்னைக்கே சொன்னோமே

இது ஆளப்போற தமிழன் கொடி

என்ற பாடல் வெளியிடப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.