தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறைக்கான வெற்றிக் கொடியாக இதை நான் பார்க்கிறேன் என விஜய் தெரிவித்துள்ளார்.
தவெக கொடியை அறிமுகம் செய்த அக்கட்சியின் தலைவர் விஜய் பின்னர் மேடையில் பேசியதாவது:
“என் நெஞ்சில் குடியிருக்கும் என் தோழர்களாகிய உங்கள் முன்னாலும் சரி, என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டு மக்கள் முன்னாலும் சரி இந்த கொடியை அறிமுகம் செய்வதை பெருமையாக நினைக்கிறேன். இதுவரை நாம் நமக்காக உழைத்தோம். இனி கட்சிரீதியாக நம்மை தயார்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் உழைப்போம்.







