புதுமையான உத்தியை கையில் எடுத்துள்ள லோகேஷ் கனகராஜ்

மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு நடுவே வெளியான விக்ரம் படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.வெளியான இரண்டே நாட்களில் 100 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்று சாதனை படைத்துள்ளது விக்ரம். உலகம் முழுவதும் வெளியான விக்ரம் திரைப்படமானது…

மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு நடுவே வெளியான விக்ரம் படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.வெளியான இரண்டே நாட்களில் 100 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்று சாதனை படைத்துள்ளது விக்ரம்.

உலகம் முழுவதும் வெளியான விக்ரம் திரைப்படமானது தமிழ்நாட்டில் மட்டும் 700க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்டு கொண்டிக்ருக்கிறது.இது போன்று ரிலீஸை எனது வாழ்நாளில் கண்டதில்லை என கமல்ஹாசனே தெரிவிக்கும் அளவிற்கு பெரிய எதிர்பார்ப்பை உருவாகியிருந்தது விக்ரம்.

கமல்,விஜய் சேதுபதி, பஹத் பாசில் என பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இருக்கும்போது, nஅனைவருக்குமான திரை பங்கீடு சரியாக இருக்குமா ? என்ற கேள்வி பரவலாக இருந்தது.அவை அனைத்திற்கும் பதிலளிக்கும் விதமாக ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சரியான முக்கியத்துவம் அளித்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

குறிப்பாக,தமிழ் சினிமாவிற்கு புதுமையான உத்தி ஒன்றை கையில் எடுத்துள்ளார் லோகேஷ்.தனது பிற படங்களின் கதாபாத்திரங்களையும் கதைக்களத்தையும் இதில் புகுத்தி, அதை ரசிக்கும்படியாகவும் எடுத்துள்ளார்.

சமீப காலங்களில் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகும் படங்கள், குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாறி வந்த சூழலில், விக்ரம் தன் மீது இருந்த உச்சபட்ச எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருப்பது ரசிகர்களை உற்சாகபடுத்தியுள்ளது.

– சந்தோஷ்,

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.