“அனைத்து மதங்களையும் மதிக்கிறோம்”- பாஜக

நபிகள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜின்டால் ஆகியோரை பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி கட்சி மேலிடம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த…

நபிகள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜின்டால் ஆகியோரை பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி கட்சி மேலிடம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நபிகள் குறித்து சர்ச்சை கருத்தை ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் நுபுர் சர்மா பேசியிருந்தார். இதனால் உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் வன்முறை வெடித்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து பாஜக செய்தி தொடர்பாளர் நுபு சர்மா மற்றும் நவீன் ஜின்டால் ஆகியோரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி பாஜக கட்சி மேலிடம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து பாஜக தேசிய பொது செயலாளர் அருண்சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் ஆயிரக்கணக்கான வரலாற்றில் ஒவ்வொரு மதமும் மலர்ந்து வளர்ந்து செழித்திருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி எல்லா மதங்களையும் மதிக்கிறது. எந்த மதத்தினரையும் இழிவுப்படுத்துவதை பாஜக கடுமையாக கண்டிக்கிறது.

பாரதிய ஜனதா கட்சி எந்த ஒரு பிரிவினரையோ அல்லது மதத்தையோ அவமதிக்கும் அல்லது இழிவுபடுத்தும் எந்தவொரு சித்தாந்தத்திற்கும் எதிரானதாகும். பாஜக அத்தகைய நபர்களையோ அல்லது தத்துவத்தையோ ஊக்குவிப்பதில்லை. இதனை பாஜக கடுமையாக கண்டிக்கிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டைக் கொண்டாடும் இந்நேரத்தில், அனைவரும் சமம், அனைவரும் கண்ணியத்துடன் வாழும், அனைவரும் இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு உறுதி பூண்டுள்ள, வளர்ச்சி மற்றும் வளர்ச்சியின் பலன்களை அனைவரும் அனுபவிக்கும் ஒரு சிறந்த நாடாக இந்தியாவை மாற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.