முக்கியச் செய்திகள் உலகம்

’அதை பண்ணுங்களேன்.. ’இந்தியாவுக்கு தலிபான் திடீர் கடிதம்

ஆப்கானிஸ்தானுக்கு விமானங்களை மீண்டும் இயக்கக் கோரி இந்தியாவுக்கு தலிபான் அரசு கடிதம் எழுதியுள்ளது.

ஆப்கானிஸ்தான் இருந்து அமெரிக்கப்படைகள் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி முழுமையாக வெளியேறிய பிறகு தலிபான் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனால்அங்கு இருந்த வெளி நாட்டினர் தங்கள் நாடுகளுக்கு செல்ல விமான நிலையத்தில் கூடினர்.

தலிபான் ஆட்சிக்கு பயந்து அந்த நாட்டை சேர்ந்தவர்களும் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல விமான நிலையத்தில் குவிந்தனர். இந்நிலையில், ஐஎஸ் தீவிரவாதிகள் விமான நிலையத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில் விமான நிலையம் சேதமடைந் தது.

இதற்கிடையில் பல்வேறு நாடுகள் ஆப்கானிஸ்தானுடனான விமானப் போக்குவரத்தை பாதுகாப்புக் காரணங்களுக்காக நிறுத்திவிட்டன. இந்தியா ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் காபூல் நகருக்கான விமான போக்குவரத்தை நிறுத்தியது.  இந்நிலையில், தங்கள் நாட்டுக்கு வர்த்தக ரீதியிலான விமானப் போக்குவரத்தைத் தொடங்கக் கோரி இந்தியா வுக்கு தலிபான் அரசு கடிதம் எழுதியுள்ளது.

அதில், காபூல் விமான நிலையத்தை கடந்த சில நாட்களாக இயக்கி வந்த அமெரிக்கப் படைகள், அதை மீண்டும் பயன்படுத்தமுடியாதபடி சேதப்படுத்திச் சென்றது. ஆனால், கத் தார் நண்பர்கள் விமான நிலையத்தை மீண்டும் இயங்கும் நிலைக்கு கொண்டு வந்துள் ளனர். இதனால், இந்தியா வர்த்தக ரீதியிலான விமானங்களை காபூலுக்கு மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். ஆப்கனின் காம் ஏர், அரியானா ஆப்கன் ஏர்லை ன்ஸ் ஆகியன மீண்டும் பயணிகள் விமானத்தை இந்தியாவுக்கு இயக்கவும் விரும்புகிறது என்று கூறியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

கட்சி தலைமை சொன்னால் உடனடியாக ராஜினாமா செய்வேன்: எடியூரப்பா

Halley karthi

சிஸ்டம் தோல்வியடைந்து விட்டதால், மக்களின் குரல்தான் முக்கியம்: ராகுல் காந்தி!

Ezhilarasan

இன்று முதல் தமிழகத்தில் இரவு ஊரடங்கு:பேருந்துகளின் நேர அட்டவணை வெளியீடு!

எல்.ரேணுகாதேவி