கேரளாவில் கண்ணூர் பல்கலைக்கழகத்தின் திருத்தப்பட்டப் பாடத்திட்டத்தில், திராவிட தேசியம் என்ற பெயரில், பெரியார் கருத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன.
கேரள மாநிலம், கண்ணூர் பல்கலைக்கழகத்தின் முதுகலை எம்.ஏ நிர்வாகவியல் மற்றும் அரசியல் படிப்புக்கான திருத்தப்பட்டப் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், திராவிட தேசியம் என்ற பெயரில் பெரியார் கருத்துகள் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், ராம் மனோகர் லோஹியாவை பற்றிய கருத்துகளும் பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. ஏற்கனவே அந்தப் பாடத் திட்டத்தில் இடம்பெற்றிருந்த பெருவாரியான இந்துத்வா கருத்துருக்கள் நீக்கப்பட்டுள்ளன.

நவீன அரசியல் சிந்தனையில் தேசமும், தேசியமும் என்ற தலைப்பில் சாவர்க்கர், கோல் வாக்கர், ஜின்னா, அபுல் கலாம் ஆசாத் உள்ளிட்டோரின் கருத்துருக்கள் சேர்க்கப்பட்டுள் ளன.
சங்பரிவார் சித்தாந்தவாதிகளான, தீன்தயாள் உபாத்யாயா, பல்ராஜ் மதோக் உள்ளிட் டோர் தொடர்பான பகுதிகளை நீக்கி, பல்கலைக்கழக கல்வியியல் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் முதுகலை நிர்வாகவியல்படிப்பிற்கான மூன் றாவது செமஸ்டர் பாடத்திட்டத்தில் காந்தியடிகள், நேருவுடன், ஆர்.எஸ்.எஸ். தலைவர் களான கோல்வால்கர், வீர் சாவர்க்கர் மற்றும் தீனதயாள் உபாத்யாயா வாழ்க்கை வரலாறு சேர்க்கப்பட்டிருந்ததால் சர்ச்சை எழுந்தது. இது குறித்து விசாரிக்க குழு அமைத்திருப் பதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.







