இந்து கோயில்கள் மட்டுமே மூடப்பட்டுள்ளதா? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே, கோயில்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்துள்ளார். சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 49 கிரவுண்டு இடம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.…

ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே, கோயில்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்துள்ளார்.

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 49 கிரவுண்டு இடம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 300 கோடி ரூபாய் மதிப்பிலான இடம் ஆக்கிர மிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது என்றார். இந்த இடத்தை ஆக்கிரமித்தவர்கள் 12 கோடி ரூபாய் வாடகை செலுத்த வேண்டியுள்ளது என்றும் அதனை பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

அப்போது, இந்து கோயில்கள் மட்டுமே மூடப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணா மலை குற்றம்சாட்டுவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.