முக்கியச் செய்திகள் விளையாட்டு

டி20 உலக கோப்பை: டாஸ் வென்ற ஜிம்பாவே அணி பேட்டிங் தேர்வு

பாகிஸ்தான்-ஜிம்பாவே இடையேயான சூப்பர் 12 சுற்றில் டாஸ் வென்ற ஜிம்பாவே அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

8வது டி20 உலகக்கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்றுக்கான ஆட்டம் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா-நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா 56 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதைதொடர்ந்து ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியில், பாபர் அசாம் (கே), முகமது ரிஸ்வான், ஷான் மசூத், இப்திகார் அகமது, ஹைதர் அலி, பெப்சி, ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம், ஷஹீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹரிஸ் ரவூப் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

ஜிம்பாப்வே அணியில், கிரேக் எர்வின் (கே), ரெஜிஸ், வெஸ்லி மாதேவேரே, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, மில்டன், ரியான் பர்ல், லூக், ரிச்சர்டு, பிராட் எவன்ஸ், பிளெஸ்சிங் முசரபானி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சேலத்தில் 120 கிராமங்களில் போதை பொருட்கள் இல்லை – டிஜிபி தகவல்

EZHILARASAN D

ஊரடங்கு முடிவுக்கு பிறகு பள்ளிகள் திறப்பா?

வேட்பாளருக்கு எதிராக பணியாற்றினால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்: அமைச்சர் தாமோ அன்பரசன்

Arivazhagan Chinnasamy