முக்கியச் செய்திகள் தமிழகம்

நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி; குவைத்திலிருந்து 3ஆம் கட்டமாக 6 தமிழர்கள் மீட்பு

நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியாக, 3 ஆம் மற்றும் இறுதி கட்டமாக குவைத்திலிருந்து, 6 தமிழர்கள் வருகிற 29ஆம் தேதி தாயகம் திரும்புகின்றனர்.

குவைத்தில் பல்வேறு பணிகளுக்காக தமிழகத்திலிருந்து சென்ற 34 தமிழர்கள் ஒரு
மாதத்திற்கும் மேலாக கொத்தடிமைகளாக வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி குவைத்திற்கு சென்றவர்களுக்கு வேலை, ஊதியம் வழங்கவில்லை எனவும், பாதிக்கப்பட்டவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

குவைத்தில் சிக்கி தவிக்கும் 34 தமிழர்களை மீட்க வேண்டும் என குடும்பத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்த நிலையில், 34 தமிழர்களும் மீட்கப்பட வேண்டும் என நியூஸ் 7 தமிழ் தொடர் செய்திகளை வெளியிட்டு வந்தது.

இதன் எதிரொலியாக குவைத்திலிருந்து முதல் கட்டமாக 19 தமிழர்கள் கடந்த 20 ஆம் தேதி தாயகம் திரும்பினர். தொடர்ந்து 2 ஆம் கட்டமாக 9 தமிழர்கள் குவைத்திலிருந்து இன்று கொச்சி விமான நிலையம் வந்தடைந்தனர். இந்நிலையில் எஞ்சியுள்ள 6 தமிழர்களும் வருகிற அக்டோபர் 29ஆம் தேதி குவைத்திலிருந்து பெங்களூருக்கு வந்து, அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு சாலை மார்க்கமாக செல்ல உள்ளனர். நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியாகவும், வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை மற்றும் இந்திய தூதரகத்தின் முயற்சியாலும் 34 தமிழர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மணமகனை கரம் பிடித்த கேரளப் பெண்!

Halley Karthik

மநீம ஆட்சிக்கு வந்தால் நல்ல கல்வி வழங்குவோம்: கமல்ஹாசன்

EZHILARASAN D

அனுமதி இல்லாமல் இயங்கிய 3 சாயப்பட்டரைகள் இடித்து அகற்றம்.

Halley Karthik