முக்கியச் செய்திகள் விளையாட்டு

டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்; இந்தியா – நியூசிலாந்து மோதல்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில், இன்று நியூசிலாந்து அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை போட்டியின் சூப்பர் 12 சுற்றில் நேரடியாக களம் காணும் அணிகள், தலா 2 பயிற்சி ஆட்டங்களை விளையாடுகின்றன. பிரிஸ்பேனில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தில் கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து அசத்தினர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகிய நிலையில் முகமது ஷமி இந்திய அணியில் இடம்பெற்றார். இருப்பினும், பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவு என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் முகமது ஷமி, முதலாவது பயிற்சி ஆட்டத்தில், ஒரே ஓவரில் 4 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, பும்ரா இல்லாத குறையை நான் தீர்த்து வைக்கிறேன் என ரசிகர்களுக்கு தனது ஆட்டத்தின் மூலம் பதிலளித்தார்.

இந்நிலையில் இன்று பிரிஸ்பேனில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும் 2-வது மற்றும் கடைசி பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. நியூசிலாந்து அணி தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்திருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது போல இந்த ஆட்டத்திலும் இந்திய அணி அசத்தும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இன்று நடைபெறும் மற்றைய பயிற்சி ஆட்டங்களில், பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஈழத்தில் தொடரும் இனவெறித் தாக்குதல்: பாமக நிறுவனர் இராமதாஸ் அறிக்கை

Halley Karthik

குறைகளை செல்போன் மூலம் தெரிவிக்கலாம்: முதல்வர் அறிவிப்பு!

Nandhakumar

தமிழ்நாட்டில் 13 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது கொரோனா பாதிப்பு!

Vandhana