முக்கியச் செய்திகள் விளையாட்டு

10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி.

 டி 20 உலகக்கோப்பை இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்  பாகிஸ்தான் வெற்றிபெற்றது.

டி 20 உலகக்கோப்பை போட்டி துபாயில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றின் முதல் ஆட்டத்திலேயே இந்திய அணி தனது பரம எதிரியான பாகிஸ்தானுடன் மோதியதால் இரு நாட்டு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியது. உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை தங்களால் வெல்ல முடியாத இந்திய அணியை வென்று காட்ட வேண்டும் என்ற முனைப்புடன் பாகிஸ்தானும், வெற்றி என்ற உத்வேகத்துடன் இந்திய அணியும் களமிறங்கின.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், ரோஹித் ஷர்மா களமிறங்கினர். ஆனால், முதல் ஓவரின் 4வது பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் ரோஹித் ஷர்மா. அடுத்தடுத்து கே.எல்.ராகுல் 3 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 60 ரன்கள் எடுத்தது இந்திய அணி. ஒருபக்கம் கேப்டன் விராட் கோலி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, ரிஷப் பந்த் 30 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அரைசதம் கடந்த விராட் கோலி 49 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்தது.


152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்தியாவின் பந்துவீச்சை பொறுமையாக எதிர்கொண்டு நிதானமாக ரன்களை சேர்க்கத் துவங்கினர். 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 71 ரன்களை எடுத்தது பாகிஸ்தான் அணி.

பாபர் அசாம், முகமது ரிஸ்வான் இருவரும் அரை சதத்தை கடக்க, இந்த இணையை பிரிக்க முடியாமல் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் தடுமாறினர். இறுதியில் 17.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் எடுத்து இந்தியாவை வீழ்த்தியது பாகிஸ்தான். 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது. தொடக்க ஆட்டக்காரர்களான பாபர் அசாம் 68, முகமது ரிஸ்வான் 79 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். உலகக்கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்றுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

’இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை’- லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை பற்றி எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Gayathri Venkatesan

“இந்தியா – அமெரிக்கா உறவு வலுவடைய வேண்டும்”: அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

EZHILARASAN D

இன்றைய போட்டியில் புதிய சாதனை படைப்பாரா ஹிட்மேன் ரோகித்!

G SaravanaKumar