முக்கியச் செய்திகள் விளையாட்டு

’இன்றைய போட்டியில அவர் கண்டிப்பா ஆடணும்..’ சொல்கிறார் தினேஷ் கார்த்திக்

பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் அந்த வீரர் கண்டிப்பாக ஆட வேண்டும் என்று தெரிவித்துள்ளார், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக்.

டி20 உலகக் கோப்பைத் தொடரில், துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் இந்தப் போட்டியில் ஷர்துல் தாகூரை கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுபற்றி அவர் கூறியதாவது: இன்றைய போட்டியில் ஷர்துல் தாகூர் கண்டிப்பாக ஆட வேண்டும். அவரிடம் சரியான ரிதம் இருக்கிறது. அவர் முன்னணி பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை வீழ்த்தும் டெக்னிக் இருக்கிறது. அவர் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். ஐபிஎல் இறுதிப் போட்டியில், அவரால்தான் ஆட்டம் திரும்பியது. அவர் மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் நம்பிக்கையுடன் ஆடி விக்கெட் வீழ்த்துவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு தினேஷ் காத்திக் கூறியுள்ளார்.

ஐபிஎல் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே-வுக்காக ஆடிய ஷர்துல் தாகூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

இந்நிலையில், தினேஷ் கார்த்திக் தனக்குப் பிடித்த பிளேயிங் லெவனை அறிவித்துள்ளார். அதில், விராத் கோலி, ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, ஷர்துல் தாகூர், வருண் சக்கரவர்த்தி, பும்ரா, புவனேஷ்வர்குமார்/ முமகது ஷமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல்: முதல்வர் உத்தரவு!

Halley Karthik

15 வயது சிறுமி கர்ப்பம்; 2 பேர் கைது

Arivazhagan Chinnasamy

திரையரங்குகள் திறப்பதை ஆலோசித்துதான் முடிவெடுக்க முடியும்: அமைச்சர் சாமிநாதன்

Gayathri Venkatesan