முக்கியச் செய்திகள் விளையாட்டு

‘நாங்க தோற்றதுக்கு அதுதான் காரணம்…’ விராத் கோலி வருத்தம்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோற்றதற்கு என்ன காரணம் என்பதை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி தெரிவித்தார்.

டி 20 உலகக்கோப்பை போட்டி துபாயில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் நேற்று மோதியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், ரோகித் சர்மா களமிறங்கினர். முதல் ஓவரின் 4வது பந்திலேயே ஷாகின் அப்ரிடியின் பந்துவீச்சில் ரான் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் ரோகித் சர்மா. அடுத்து கே.எல்.ராகுல் 3 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 11 ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் நிலைத்து நின்று ஆடிய விராத் கோலி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்தது. விராத் கோலி 49 பந்துகளில் 57 ரன்களும் ரிஷப் பண்ட் 39 ரன்களும் எடுத்தனர்.

152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். இந்தியாவின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு நிதானமாக ரன்களை சேர்க்கத் துவங்கினர். 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 71 ரன்களை எடுத்தது பாகிஸ்தான் அணி. பாபர் அசாம், முகமது ரிஸ்வான் இருவரும் அரை சதத்தை கடக்க, இவர்களை பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் தடுமாறினர். 17.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் எடுத்து இந்தியாவை வீழ்த்தியது பாகிஸ்தான். 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.

பாபர் அசாம் 68, முகமது ரிஸ்வான் 79 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் முதல்முறையாக வெற்றிபெற்று சாதனை பெற்றுள்ளது. மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய ஷாகின் ஷா அப்ரிதி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

போட்டிக்குப் பின் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி கூறியதாவது: நாங்கள் எங்கள் திட்டங்களை சரியாக செயல்படுத்தவில்லை. அதற்கு பனியின் தாக்கமும் காரணம். பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டது. நாங்கள் முதலிலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்தது கஷ்டமாகிவிட்டது. அதில் இருந்து மீள்வது கடினமான விஷயம். அவர்கள் பந்துவீச்சி மட்டுமின்றி பேட்டிங்கிலும் அருமையாக செயல்பட்டனர்.

நாங்கள் 10-20 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்க வேண்டும். ஆனால், பாகிஸ்தானின் தரமான பந்துவீச்சு அதற்கு எங்களை விடவில்லை. இந்த தோல்வியால் நாங்கள் பீதி அடைந்துவிட மாட்டோம். இந்த தொடரில் ஆரம்பம்தான் இது. முடிவல்ல. இவ்வாறு விராத் கோலி கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

கூகுள், பேஸ்புக் நிறுவனங்களுக்கு சம்மன்

Ezhilarasan

“அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் நெத்தியடி தீர்ப்பு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Halley karthi

ரிஸ்வான், பாபர் மீண்டும் மிரட்டல்: அரை இறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான்

Halley karthi