கே.எல்.ராகுல் திடீர் விலகல்; புதிய கேப்டன் இவர் தான்

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டி20 ஆட்டம் இன்று நடைபெற இருந்த நிலையில் கேட்னாக நியமிக்கப்பட்டிருந்த கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார். இதையடுத்து விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கேப்டன்…

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டி20 ஆட்டம் இன்று நடைபெற இருந்த நிலையில் கேட்னாக நியமிக்கப்பட்டிருந்த கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார். இதையடுத்து விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கேப்டன் ஆனார். 

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்வும் காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகினார்.

இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி, 5 டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டி20 ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு, டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த டி20 ஆட்டத்தில் இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகித் ஷர்மா, விராட் கோலி உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎலில் சிறப்பாக செயல்பட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தினேஷ் கார்த்திக்கையும் சேர்த்துள்ளதால், இத்தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திடீர் விலகல்

இந்தியா, தென் ஆப்ரிக்கா இடையேயான டி20 போட்டிகளுக்கு இந்திய அணியின் கேப்டனாக கே எல் ராகுல் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக கே.எல்.ராகுல் இந்த தொடரிலிருந்து விலகினார்.

இதுதொடர்பாக பிசிசிஐ ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ் ஆகியோர் காயம்  காரணமாக இந்த தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கேப்டன் பொறுப்பை ஏற்பார். ஹார்திக் பாண்டியா  துணை கேப்டனாக செயல்படுவார்” என்று குறிப்பிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.