முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆற்று மணல் விற்பனை குறித்து அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

ஆற்று மணல் எந்த அளவின் அடிப்படையில் விற்பனை செய்யப்படுகிறது? என்றும் சட்ட அளவியல் அடிப்படையில் தர நிர்ணயம் செய்யப்பட்ட அளவீடுகள் பயன்படுத்தப்படுகிறதா? என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

 

திருச்சியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தமிழ்நாடு அரசு தற்போது நேரடியாக வாகன உரிமையாளர் அல்லது மாட்டு வண்டியின் உரிமையாளரிடம் மணலை விற்பனை செய்வதை சுட்டிக்காட்டினார். கடந்த ஜனவரி மாதம் 6-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் யூனிட் அளவில் மணல் விற்பனை நடைபெற்று வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

யூனிட் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது தர நிர்ணயம் செய்யப்பட்ட அளவீடு அல்ல என்றும் சட்ட அளவியல் விதிப்படி மணல், கிராவல் மண், கிரானைட் போன்றவை முறையான தர நிர்ணயம் செய்யப்பட்ட எடை அல்லது அளவீடு அடிப்படையில் விற்பனை செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

இவ்வாறு முறையாக அளவிடு செய்யப்படாமல் விற்பனை செய்யப்படுவதால், அரசுக்கு அதிக அளவில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது என தெரிவித்துள்ள மனுதாரர், ஆகவே இதனை முறைப்படுத்த கோரி அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மணலை விற்பனை செய்ய தரநிர்ணய அளவீட்டை உருவாக்கி, அதன் அடிப்படையில் மணல் விற்பனையை மேற்கொள்ள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆனந்தி அமர்வு, மணல் எந்த அளவின் அடிப்படையில் விற்பனை செய்யப்படுகிறது? என கேள்வி எழுப்பினர். மேலும் சட்ட அளவியல் அடிப்படையில் தர நிர்ணயம் செய்யப்பட்ட அளவீடுகள் பயன்படுத்தப்படுகிறதா? என்றும் வினாவினர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு தரப்பில் உரிய தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சென்ற நிதியாண்டில் மத்திய அரசின் நேரடி வரி வருவாய் அதிகரிப்பு: நிர்மலா சீதாராமன்

Halley Karthik

கொரோனா தடுப்பு நடவடிக்கை: ஒருங்கிணைப்புக் குழு அதிகாரிகள் நியமனம்!

Halley Karthik

அம்பத்தூர் டயர் உற்பத்தி தொழிற்சாலை தீ விபத்தில் ரூ. 1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்

Gayathri Venkatesan