பஞ்சாபில் மதுபான விலை 30-40 சதவீதம் குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய கலால் வரிக்கு ஆம் ஆத்மி தலைமையிலான பஞ்சாப் அரசு நேற்று ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, மதுபானங்கள் விலை குறையும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான மாநில அமைச்சரவை, 2022-23க்கான புதிய கலால் வரி கொள்கைக்கு நேற்று ஒப்புதல் வழங்கியது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மொத்தம் ரூ.9,647.85 கோடியை மதுபான விற்பனை மூலம் ஈட்ட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “இந்தக் கொள்கையானது மதுபானங்கள் கடத்தப்படுவதைத் தடுக்கிறது” என்றார்.
இதனிடையே, டெல்லியில் மதுபானங்களுக்காக விதிக்கப்படும் கலால் வரியை இந்த புதிய கலால் வரி கொள்கை பிரதிபலிக்கிறது. சிலர் பயன்பெற வேண்டும் என்பதால் பஞ்சாப் அரசு டெல்லி மாடலை பின்பற்றுகிறது” என்றார்.
இதையும் படியுங்கள்:இலங்கைக்கு உதவி – இந்தியாவை புகழ்ந்த சீனா
புதிய கலால் வரி கொள்கை ஜூலை 1ம் தேதி முதல் அடுத்த மார்ச் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும். மதுபான விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானதை மதுப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
-மணிகண்டன்








