முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டில் புதிதாக 16,813 பேருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16 ஆயிரத்து 813 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 237 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 16 ஆயிரத்து 813 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23 லட்சத்து 08 ஆயிரத்து 838 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றில் இருந்து குணமடைந்து 32 ஆயிரத்து 049 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 20 லட்சத்து 91 ஆயிரத்து 646 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில், 358 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 528 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. புதிதாக 1223 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 45 பேர் உயிரிழந்துள்ளனர். 3598 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஈரோட்டில் 1390 பேருக்கும் செங்கல்பட்டில் 676 பேருக்கும் திருப்பூரில் 897 பேருக்கும் சேலத்தில் 945 பேருக்கும் கோவையில் 2236 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

பேராசிரியர்களை கல்லூரிகளுக்கு நேரில் வரவழைக்கக் கூடாது : தமிழக அரசு!

Ezhilarasan

கொரோனா அச்சத்தால் வீரர்கள் விலகல்: ஐபில் போட்டிகள் தொடர்ந்து நடைபெறுமா? பிசிசிஐ விளக்கம்

Karthick

கொரோனா ஒழிய இலங்கையில் சிறப்பு வழிபாடு!

Karthick