ஏழு தேசிய விருதுகளை பெற்ற மேற்கு வங்க இயக்குநர் புத்ததேவ் தாஸ்குப்தா காலமானார். அவருக்கு வயது 77.
பிரபல மேற்கு வங்க இயக்குநர் புத்ததேவ் தாஸ்குப்தா. ஏராளமான படங்களை இயக்கியுள்ள இவர், சிறந்த படத்துக்கான தேசிய விருதுகளை 5 முறையும் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதுகளை 2 முறையும் பெற்றவர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவர் இயக்கிய பாக் பகதூர், தஹதேர் கதா, கராச்சார், உத்தாரா, கால்புருஷ் உட்பட பல்வேறு படங்கள் அதிகம் கவனிக்கப்பட்டன. தேசிய விருதுகள் மட்டுமன்றி பல்வேறு வெளிநாட்டு பட விழாக்களின் விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ள புத்ததேவ் தாஸ்குப்தா, கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கொல்கத்தாவின் தெற்கு பகுதியில் உள்ள வீட்டில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
புத்ததேவ் தாஸ்குப்தாவின் மறைவுக்கு பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.