முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

’முடியல.. எனக்கும் கொஞ்சம் கொடு’ பாட்டிலை திறந்து தண்ணீர் குடிக்கும் குரங்குகள்!

தாணிப்பாறை சதுரகிரி கோயில் அடி வாரத்தில், தண்ணீர் பாட்டிலை திறந்து குரங்குகள் தாகம் தணிக்கும் வீடியோ காட்சிகள் வேகமாக பரவி வருகிறது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில், தரை மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அமாவாசை,பவுர்ணமி நாட்களுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.

மற்ற நாட்களில் கோயில் அடிவாரப் பகுதிகள் வரை பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கோயில் அடைக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் வருகை இன்றி அடிவாரப் பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

இதனால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து கீழே இறங்கும் குரங்குகள், குடிநீர் இல்லாததால் அருகில் உள்ள கடைகளில் தண்ணீர் பாட்டிலை தூக்கி சென்று தண்ணீரை குடித்து வருகிறது.

’வனத்துறையினர் குரங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்’ என்று அந்தப் பகுதியினர் கோரிக்கை வைக்கின்றனர்.

Advertisement:

Related posts

பல நூறு கி.மீ சைக்கிளிங்: அசத்திய ஆர்யாவுக்கு குவியும் பாராட்டு!

Saravana

’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்?’ கமல்ஹாசன் கேள்வி!

Gayathri Venkatesan

குறைந்த இடத்தில் பலவகை காய்கறிச் செடிகளை வளர்ப்பது எப்படி? – கேரள விவசாயின் புதிய முயற்சி!

Karthick