விழுப்புரத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று அறிகுறி: தொடர் கண்காணிப்பில் மருத்துவ குழு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, ஒருவருக்கு ஒமிக்ரான் வகை தொற்று அறிகுறிகள் தென்பட்டுள்ளதால், மருத்துவ குழுவினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். எண்டியூர் பகுதியில், 9 வயது சிறுவன் உள்ளிட்ட 5 பேருக்கு சில நாட்களுக்கு…

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, ஒருவருக்கு ஒமிக்ரான் வகை தொற்று அறிகுறிகள் தென்பட்டுள்ளதால், மருத்துவ குழுவினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

எண்டியூர் பகுதியில், 9 வயது சிறுவன் உள்ளிட்ட 5 பேருக்கு சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில், 38 வயதான நபர் ஒருவருக்கு, ஒமிக்ரான் வகை தொற்று அறிகுறிகள் தென்பட்டுள்ளதால், அவரது பரிசோதனை விவரத்தை, சென்னை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நோய் தொற்று பகுதியில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் தொற்று அறிகுறி இருப்பதால், அவருடன் தொடர்பில் இருந்தவர்களிடம் சோதனை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.