All India council for technical education பெயரை பயன்படுத்தி, போலி வேலைவாய்ப்பு முகாம் நடத்தி மோசடியில் ஈடுபட்டதாக 8 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசின் All India council for technical education அமைப்பு, புதிதாக தொடங்கப்படும் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது போன்ற பணிகளை செய்து வருகிறது. நாடு முழுவதும் சென்னை உட்பட 7 இடங்களில், இந்த அமைப்புக்கு அலுவலகங்கள் உள்ளன.
இந்நிலையில், இந்த அமைப்பின் பெயரை பயன்படுத்தி, வேலைவாய்ப்பு முகாம் நடத்தி மோசடிகள் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. திருப்பத்தூர் மாவட்டம், பாரண்டபள்ளியில் போலி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார், அருண்குமார், ராஜேஷ், சக்கரவர்த்தி, உள்ளிட்ட 8 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








