நடத்தையில் சந்தேகம்; தம்புள்ஸால் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவன்

சிவகங்கை அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், மனைவியை தம்புள்ஸால் தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை ரயில் நிலையம் அருகேயுள்ள எம்.ஜி.ஆர் நகர்ப் பகுதியில் மார்க் ஆண்டனி…

சிவகங்கை அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், மனைவியை தம்புள்ஸால் தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை ரயில் நிலையம் அருகேயுள்ள எம்.ஜி.ஆர் நகர்ப் பகுதியில் மார்க் ஆண்டனி – கற்பகம் என்ற தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு ரவீந்திரன், நவீன் என்கிற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மனைவி கற்பகத்தின் நடத்தையில் சந்தேகம் இருப்பதாகக் கூறி கணவர் மார்க் ஆண்டனி அடிக்கடி மனைவியுடன் சண்டையிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் கணவன் மார்க் ஆண்டனி உடற்பயிற்சி செய்யும் தம்புள்ஸால் மனைவியைத் தாக்கியதில் மனைவி கற்பகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அண்மைச் செய்தி: ‘பாதுகாப்பற்ற சூழலில் மாணவிகள்; சுற்றுச்சுவரைச் சீர் செய்யக் கோரிக்கை’

மனைவி உயிரிழந்த நிலையில் கணவன் சிவகங்கை நகர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் கற்பகத்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் தடயங்களைச் சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன் தம்புள்ஸால் அடித்து கொலை செய்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.