சூரியா -சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாக இருக்கும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு எப்போது? ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டிய அப்டேட்.
தமிழில் தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவரான சூர்யா “சூரரைப் போற்று” திரைப்படத்தில் நடித்ததற்காகச் சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அண்மையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற “விக்ரம்”திரைப்படத்தில் சிறப்புக்காட்சி ஒன்றில் வில்லனாகத் தோன்றி தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
மேலும், சூரியா அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். இப்படியிருக்க, அண்ணாத்த படத்தை இயக்கிய இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூரியா நடிப்பில் புதிய படம் ஒன்றை எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்த அறிவிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வந்த நிலையில் சில காரணங்களால் இப்படம் தள்ளிப்போனது. இந்நிலையில் தான் சூரியா -சிறுத்தை சிவா படத்தின் ஷூட்டிங் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த புதிய கூட்டணியில் உருவாக இருக்கும் படம் இந்த மாதம் 21-ஆம் தேதி தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வத் தகவல் விரைவில் வெளிவரும் எனவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.







