அமெரிக்காவில் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்திக்குத்து

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அடையாளம் தெரியாத நபரால் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கத்தியால் குத்தப்பட்டார். சாத்தானின் வசனங்கள் என்ற புத்தகத்தை எழுதியதற்காக பல ஆண்டுகளாக உயிருக்கு அச்சுறுத்தல்களை சந்தித்து…

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அடையாளம் தெரியாத நபரால் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கத்தியால் குத்தப்பட்டார்.

சாத்தானின் வசனங்கள் என்ற புத்தகத்தை எழுதியதற்காக பல ஆண்டுகளாக உயிருக்கு அச்சுறுத்தல்களை சந்தித்து வருபவர் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. புக்கர் பரிசு பெற்றவரான இவர், நியூயார்க்கில்  நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிக் கொண்டிருந்தார்.

சல்மான் ருஷ்டி மீது திடீர் தாக்குதல்

அப்போது மேடையில் ஏறிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சல்மான் ருஷ்டியை கத்தியால் திடீரென குத்தினார்.  இதில் நிலைகுலைந்து போன சல்மான் ருஷ்டி கீழே விழுந்தார்.  உடனே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் காட்சிகள் இணையங்களில் வைரலாகி வருகிறது.  காயமடைந்த சல்மான் ருஷ்டி உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கு சல்மான் ருஷ்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .

https://twitter.com/CharlieSavenor/status/1558104554650181639?t=8JaSROoterrzg2BJAalLTg&s=19

கைது செய்து விசாரணை

சல்மான் ருஷ்டியை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கத்தியை பயன்படுத்தி சல்மான் ருஷ்டியை தாக்கியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.