புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்!

புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க புதுச்சேரி அரசு நிதித்துறை உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி நிதித்துறை துணைச் செயலாளர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குரூப் சி மற்றும் குரூப் பி – யில் உள்ள அரசிதழ் பதிவு பெறாத ஊழியர்களுக்கு, 31.03.2026 அன்று பணியில் இருந்து, 2025-26-ம் ஆண்டில் குறைந்தது 6 மாதம் தொடர்ந்து பணி செய்தவர்களுக்கு, உற்பத்தி திறன் போனஸ் திட்டத்தில் வராதவர்களுக்கு மட்டும் இந்த போனஸ் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 30 நாள் போனஸ் ரூ.6,908 வழங்கப்படும் என்றும், தற்காலிக தொழிலாளர்களுக்கு 240 நாள் வேலை செய்தவர்களுக்கு ரூ.1,184 வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய துணை ராணுவ படை, ஆயுதப்படை ஊழியர்களுக்கும் இது பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 6 மாதத்திற்கும் குறைவாக பணி செய்தவர்களுக்கு, பணி செய்த மாதங்களுக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில் போனஸ் வழங்கப்படும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை 2026-27-ம் நிதி ஆண்டின் பட்ஜெட்டில் இருந்து வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.