தமிழகத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு கடந்த திமுக ஆட்சியின்போது, நிரந்தர அங்கீகாரம், பள்ளிகள் தரம் உயர்த்துதல் மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் மேல் முறைகேடாக பணம் வசூலிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த செப்டம்பர் 16-ம் தேதி அன்பில் மகேஸ்க்கு சொந்தமான இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் அன்பில் மகேஷ் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் நேற்று மாலை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை போலீசார் கைது செய்து சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு நீதிமன்ற அமர்வில் ஆஜர் படுத்தினர். அப்போது சிறப்பு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அன்பில் மகேஷை நவ.6-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டனர். இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு திமுக தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்ரனர்.
இந்த நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட அன்பில் மகேஷை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசினார். உடன், முன்னாள் அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் இருந்தனர்.




