நடிகர் சூர்யாவின் “சூர்யா 40” திரைப்படத்தின் முதல் பார்வை ஜூலை 24 ஆம் தேதி அவருடைய பிறந்தநாளன்று வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூரிய நடித்து வெளியாகவுள்ள பெயரிடப்படாத படத்திற்கு “சூர்யா 40” . என ரசிகர்கள் பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை 12 ஆம் தேதி காரைகுடியில் மீண்டும் தொடங்கும்மென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நடிகர் சூர்யா சமூக நலனுக்காக போராடும் வலுவான காதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் சத்தியராஜ், சரண்யா பொன்னவன்னன், சிபி, ஜெய பிரகாஷ் மற்றும் நட்சத்திர பட்டாளம் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர், ஈமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
அசத்தலான படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ள சூர்யா தற்போது நடிக்கும் “சூர்யா 40” படத்தின் முதல் பார்வை ஜூலை 24 ஆம் தேதி அவரின் 46 வது பிறந்தநாளன்று வெளியிடப்படும் என்று தகவல் ரசிகர்கள் மத்தியில் படம் குறித்த பெரும் எதிர்பார்வை ஏற்படுத்தி உள்ளது.







