சூர்யா 40 படம் குறித்து வெளிவரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என இயக்குநர் பாண்டி ராஜ் தெரிவித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் புதிய படமொன்றில் சூர்யா நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு சூர்யா 40 என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க உள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார். இவர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் நடித்துள்ளார். முன்னதாக இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக வதந்தி பரவியது. இதற்கு இயக்குநர் பாண்டிராஜ் மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சூர்யா 40 படத்தில் 5 கெட்டப்களில் சூர்யா நடிக்க உள்ளார் என்றும் அதில் ஒரு ரோல் தமிழக முதலமைச்சர் என்றும் கூறப்பட்டு ஒரு ட்வீட் சூர்யா, பாண்டிராஜை டேக் செய்து பதியப்பட்டிருந்தது. இதை ரீட்வீட் செய்த இயக்குநர் பாண்டிராஜ் “வதந்திகளை நம்ப வேண்டாம்” என ஸ்மைலி ஒன்றை பதிவிட்டுள்ளார்.







